June 24, 2021

MAKKAL CHANAKYA

makkal chanakya tamil magazine

அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் அரசே அந்த மருத்துவமனைகளை கட்டுப்பாட்டில் எடுத்து சிகிச்சை வழங்கவேண்டும் என்று பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுமென தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த புகார்களை தெரிவிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளிலேயே படுக்கைகள் காலியாக இருப்பதால் கொரோனா தோற்றால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளவர்கள்  சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.மேலும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.