அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாடி அரசு மருத்துவமனையில் பிறந்த இளம் குழந்தைகளுக்கு 10 பேருக்கு தங்க மோதிரம்

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாடி அரசு மருத்துவமனையில் பிறந்த இளம் குழந்தைகளுக்கு 10 பேருக்கு தங்க மோதிரம்

ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எம்.டி .மைக்கேல்ராஜ் தலைமையில்சென்னை அடுத்த அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாடி அரசு மருத்துவமனையில் பிறந்த இளம் குழந்தைக்கு 10 பேருக்கு தங்க மோதிரத்தை பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருள்களையும் தமிழ் வளர்ச்சி தொல்லியல் துறை அமைச்சர் மாபா க.பாண்டியராஜன் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டர் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செவிலியர்களுக்கும் தூமை பணியாளர்களுக்கும் 50 பேருக்கு பட்டுப் புடவைகள் வழங்கப்பட்டது.தாய்மார்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்கள் புரட்சித்தலைவி அம்மா வளர்த்த பிள்ளைகள் இதேபோல் உங்கள் பிள்ளைகளை நீங்கள் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என இப் பிள்ளைகள் வளர்ந்து வரும் காலங்களில் அம்மாவின் அரசு பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல வசதிகள் செய்து இருக்கும் என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *