June 24, 2021

MAKKAL CHANAKYA

makkal chanakya tamil magazine

ஆவடி சேக்காடு ஏரியில் வழுக்கி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்த கட்டடத் தொழிலாளி

சென்னை ஆவடி மாநகராட்சி அடுத்த சேக்காடு மேட்டு தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி வயது 55 கட்டடவேலை செய்யும் நபர் இவர் கடந்த 23 11 2020 அன்று மாலை வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்  இன்று காலை 11 மணி அளவில் அந்த வழியாகச் சென்ற பொழுது ஏரியில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்து ஆவடி போலீசார் அங்கு சென்றனர்.  காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு சென்னை ஆவடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் இதுகுறித்து ஆவடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருப்பதி ஏரியில் வழுக்கி விழுந்து இறந்தது தெரியவந்தது.