June 24, 2021

MAKKAL CHANAKYA

makkal chanakya tamil magazine

கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் பருவ நிலை மாறுபாட்டினால் புதிதாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது

கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் பருவ நிலை மாறுபாட்டினால் புதிதாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது

கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் பருவ நிலை மாறுபாட்டினால் புதிதாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது  மேல்மலை பகுதிகளில் முறையான மருத்துவ வசதிகள் இல்லை. பூம்பாறை,மற்றும் மன்னவனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. ஆனால் கேரள எல்லையை ஒட்டிய கிராமங்களான கிளாவரை,போலூர்,பூண்டி ஆகிய ஊர்களிலிருந்து மன்னவனூர் சென்று வர 8கி.மீ முதல் 16கி.மீ வரை தூரம் உள்ளது.மேலும் இப்பகுதிகளிலும்,கூக்கால் பஞ்சாயத்து பகுதிகளிலும் ,பூம்பாறை பஞ்சாயத்து பகுதிகளிலும் முறையான மருத்துவ வசதிகள் இல்லாததால் உள்ளூரில் மருந்து கடைகளில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர்.இப்பகுதிகளில் முறையாக மருந்து கடைகள் வைக்க உரிமம் மற்றும் முறையான படிப்பு படிக்காமல் மருந்து மாத்திரைகளும் ஊசிகளும் போடுகின்றனர்.பொதுமக்களிடம் இவ்விசயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. நடமாடும்போலி மருத்துவர்கள் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உலா வருகின்றனர்.மருத்துவ முகாம் பல இடங்களில் நடைபெற்றாலும் பொது மக்கள் முகாமில் கலந்து கொள்ளாமல் மேற்கண்ட மருந்து கடைகளில் சென்று மருந்து மாத்திரையும் ,ஊசியும் போடுகின்றனர்.அதனால் இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளது.ஆகையால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு இப்பகுதிகளில் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நலன் காக்க முறையான மருத்துவமனை,மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.