June 24, 2021

MAKKAL CHANAKYA

makkal chanakya tamil magazine

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று 15&10&2019 செவ்வாய்கிழமை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  உரிமைகளுக்கான சங்கம் கீழ் கண்ட கோரிக்கைகளை வழியுறுத்தி காத்த்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்

கோரிக்கைகள்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தின் போது அனைத்து மருத்துவர்களையும் அனைத்துதுறை அலுவலர்களையும் வரவழைத்து அடையாள சான்று, இரயில் பாஸ் பேருந்து உதவியாளர் பாஸ் வழங்குவதற்கு நடவடிக்கை எடு.

கோட்டாட்சியர் தலைமையில் மாதம் ஒரு முறை மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்திட நடவடிக்கை எடு.

வீடு இல்லா மாற்று தினாளி இடம் பெற்றுள்ள குடும்பங்களுக்கு  பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் முன்னு¬மை வழங்க நடவடிக்கை எடு.

மாநில வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தரவின் படி உதவித்தொகை பெற்றிட ஏடிஎம் கார்டு வழங்க வங்கிகளுக்கு உத்திரவிடு.

கோட்டாட்சியரகத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு பொது கட்டிடங்களும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தடையில்லா சூழலுடன் மாற்றி அமைக்க உத்திரவிடு என்ற கோரிக்கிகளை வழியுறுத்தி போராட்டம்